

ஷா ஆலம், மே 25-
மலேசிய லோஜிஸ்டிக்ஸ் தொழில் முனைவோர் சங்கத்தின் Pulse Business Networking Dinner நிகழ்ச்சி நேற்று புக்கிட் கெமுனிங் மாநாட்டு மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
மலேசிய லோஜிஸ்டிக்ஸ் தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் டாக்டர் புவனேஷ் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் , கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் மற்றும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

PULSE அமைப்பின் BUSINESS NETWORKING DINNER 2025 நிகழ்வு சமூக வலைபின்னலுக்கு வழிவகுத்துள்ளது என்று அதன் தலைவர் தலைவர் டாக்டர் புவனேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார்.
தீபகற்ப மலேசியா லோஜிஸ்டிக்ஸ் தொழில் முனைவோர் சங்கம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சங்கமானது தீபகற்ப மலேசியாவில் உள்ள தளவாட தொழிற்துறையை மேம்படுத்தவும் அதன் உறுப்பினர்கள் சமூக வலைப்பின்னலை உருவாக்கவும் உருவாக்கப்பட்டது.
அவ்வகையில், நேற்றிரவு நடைபெற்ற BUSINESS NETWORK DINNER நிகழ்ச்சியில் பல முகப்புகளும் அமைக்கப்பட்டு தொழிற்துறை சார்ந்த கருத்துகளும் பரிமாறப்பட்டதாக அவர் சொன்னார்.
விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து அந்தோனி லோக்கிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
லாரி ஓட்டுநர்களை உட்படுத்திய சாலை விபத்துகள் அதிகளவில் நிகழ்கின்றன. அவர்களின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகளுக்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்பது இல்லை.
லாரி ஓட்டுநர்களுக்கு உரிமம் வழங்கப்படுவதற்கு முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.

