செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறையில் 200 இளைஞர்கள் பயன் அடைந்தனர்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு, மே 26-
உலகம் இன்று செயற்கை நுண்ணறிவு துறையில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

அந்த வகையில் மலேசியர்களும் செயற்கை நுண்ணறிவு துறையில் பின் தங்கி விடாமல் இருக்க நாடு தழுவிய அளவில் பயிற்சி பட்டறைகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கோலகுபு பாருவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு பட்டறையில் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன் அடைந்தனர்.

கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் இந்த பட்டையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் ஆதரவில் உலு சிலாங்கூர் கவுன்சிலர் திலகேஸ்வரி, கிராமத் தலைவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையை கவுன்சிலர் ஷரிபா பாக்கார் நிறைவு செய்தார்.

வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மிகவும் அவசியமாகும்.

உலகமே இன்று ஏ.ஐ துறையில் கால் பதித்து கொண்டிருக்கும்.

மலேசியர்கள் ஏ.ஐ துறையில் தீவிர கவனம் செலுத்தி தங்கள் ஆற்றலை வளர்ந்து கொள்ள வேண்டும் என்று கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாக் சோக் தாவ் தமது உரையில் கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த கவுன்சிலர் திலகேஸ்வரி மற்றும் அவர்தம் குழுவினரை வெகுவாக பாராட்டினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles