அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரபிஸி ரம்லி!

கோலாலம்பூர், மே 28-
கெஅடிலான் கட்சியின் தேசிய துணை தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்த பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி இன்று தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

கெஅடிலான் துணைத் தலைவருக்கான தேர்தலில் நூருல் இஸாவிடம் தோல்வி அடைந்தார்.

கெஅடிலான் தேர்தலின் போது கட்சியின் துணைத் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள தவறினால், அமைச்சர் பதவியிலிருந்து விலகி சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவேன் என ரபிஸி ரம்லி அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் கட்சியின் உயர்மட்டத் தலைமையில் இல்லாத ஒருவர் அமைச்சரவைப் பதவியை வகிப்பது பொருத்தமற்றது.

ஆகவே எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் சமர்ப்பித்து விட்டேன்.

எனது ராஜினாமா வரும் ஜூன் 17ஆம் தேதி அமலுக்கு வரும். இன்று முதல், ஜூன் 16 மீதமுள்ள வருடாந்திர விடுப்பில் இருப்பேன் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles