
கோலாலம்பூர் மே 28-
கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்த இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி தமது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
முன்னதாக பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி தமது அமைச்சர் பதவியை துறந்தார்.
அமைச்சரவையில் இரண்டு முக்கிய அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிட சமர்ப்பித்து விட்டதாக செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான நிக் நஸ்மி கூறினார்.
ஜூலை 4 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

