நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சக்கர நாற்காலியும், சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உதவிகள் வழங்கியது பெருவாஸ் ஐபிஎப் தொகுதி.

பெருவாஸ், ஜூன் 1-
ஐபிஎப் புருவாஸ் தொகுதியின் 33ம்ஆண்டு கூட்டம் டேவான் தாமான் டாமாய் ஆயர் தாவாரில் சிறப்பாக நடைபெற்றது.ஐபிஎப் புருவாஸ் தொகுதி தலைவர் வ.கந்தசாமி தலைமையில் சுமார் 70 பேராளர்கள் கலந்து கொண்டார்கள்.

பெருவாஸ் நாடாளுமன்ற பாரிசான் நேசனல் தலைவரும் அம்னோ தொகுதி தலைவர் டத்தோ டாக்டர் அஜி அசாஹார் அமாட் திறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மாநில பிரதிநிதி பேரா மாநில ஐபிஎப் உதவி தலைவரும் தைப்பிங தொகுதி தலைவர் டாக்டர் ஜி.எஸ்.குமார் சிறப்புரை ஆற்றினார் மற்றும் தேசிய பிரதிநிதி ஐபிஎப் தேசிய துணை பொருளாரும் பினாங்கு மாநில ஐபிஎப் தலைவர் மதிப்புமிகு டாக்டர் எஸ்.குமரேசன் கலந்து சிறப்புரை ஆற்றினார்.

இரண்டாவது அங்கமாக
அன்னையர் தினம் அனிச்சல் வெட்டி கொண்டாடப்பட்டது. சிறப்பு வருகை பெங்களான் பாரு சட்டமன்ற உறுப்பினர் அஸ்மான நோ கலந்துக்கொண்டார். அதனை் தொடர்ந்து நோயால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. அத்துடன் மூன்று எஸ்‌.பி‌.எம் மாணவர்களுக்கு டாக்டர் ஜி‌.எஸ்.குமார் அன்பளிப்பு வழங்கி சிறப்பித்தார்.

இறுதி அங்கமாக ஐபிஎப் புருவாஸ் தொகுதி செயலாளர் வ.பெரியசாமி நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles