46 ஆவது ஆண்டாக பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தின் ஏற்பாட்டில் தேசிய நிலையிலான பூப்பந்து போட்டி 730 பேர் பங்கேற்பு !

பேராக் மாநில இந்திய பூப்பந்து மன்றத்தின் ஏற்பாட்டில் 46 ஆவது ஆண்டாக தேசிய நிலையில் பூப்பந்து விளையாட்டுப் போட்டி பேரா இந்தியர் பூப்பந்து மன்றத்தின் ஏற்பாட்டில் கோலாகலமாக நடைபெற்றது.

நாடு முழுவதிலும் இருந்து சுமார். 730 போட்டியாளர்கள் கலந்துக் கொள்ள வருகை புரிந்துள்ளதாக இம்மன்றத்தின் தலைவரும் ஏற்பாட்டுக்குழு தலைவருமான என். லோகநாதன் கூறினார்

தேசிய நிலையில் நடைபெறும் இப்போட்டி சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கும் பொருட்டு விளையாட்டுத் துறை அமைச்சு 45 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கியுள்ளது என்றார்.

ஈப்போவில் நடைபெற்ற இப்போட்டியை பேரா மாநில சட்டமன்ற துணை சபா நாயகரும் கென்னிங் சட்டமன்ற உறுப்பினருமான Jeeny Choi Tsi Jen சிறப்பு வருகை புரிந்து போட்டியை அதிகாரப்பூரவமாக தொடக்கி வைத்தார்.

அரசாங்கம் விளையாட்டுத் துறையை தொடர்ந்து ஊக்கப்படுத்த அரசாங்கம் விளையாட்டு மன்றங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது.

அந்த வகையில் பேரா இந்தியர் பூப்பந்து மன்றம் 46 ஆவது ஆணடாக இப்போட்டியை நடத்தி வருவதுடன் பல சிறந்த விளையாட்டாளர்களை உருவாக்கி வருவதை பாராட்டினார்.

இம்மன்றம் மேற்கொண்டு வரும் அதன் நடவடிக்கைக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவை வழங்கும் என்றார்.

விளையாட்டுத் துறை விளையாட்டாளர்களை உருவாக்குவது மட்டும் அல்ல சமுகத்திற்கிடையிலும் , நாடுகளுக்கிடையிலும் நல்லுறவை வலுப்படுத்த அது வகை செய்வதாக் குறிப்பிட்டார். இதில் 24 பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்பர். அவற்றில் 35 வயதிற்கு மேற்பட்ட இரட்டையர் மகளிர் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரிவு அறிமுகம் செய்யப்படுள்ளதால் நாடு முழுவதுமுள்ள அதிகமான இந்திய மகளிர்கள் கலந்துகொண்டுள்ளனர் என்றார் . இபபோட்டிகள் ஈப்போவில் உள்ள பூப்பந்து விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இவ்வாண்டு 7 வயது வயது முதல் 70 வயதிற்கும் உடபட்டோர் இப்பூப்பந்து போட்டியில் கலந்துக்கொண்டுள்ளனர்

இப்போட்டியில் பெர்லீசிலில் இருந்து ஜொகூர் மாநில வரையிலிந்துபோட்டியார்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்தப் பூப்பந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்ய ,ஆதரவு வழங்கிய அனைவருக்கும் என். லோகநாதன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்


Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles