இளைஞர் விளையாட்டு துறை அமைச்சை நம்ப வைத்து 44,800 வெள்ளி மானியம் பெற்றது ஏன்! விலாயா சிலம்பக் கழக தலைவர் உதயகுமார் கேள்வி

2024 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சிலாங்கூர் சிப்பாங் பண்டார் பாரு சாலாக் திங்கி விளையாட்டு அரங்கில் அனைத்துலக சிலம்ப போட்டி நடைபெற்று உள்ளது.

இந்த போட்டி அனைத்துலக சிலம்ப மன்றத்தால் அங்கீகரிக்கபட்ட போட்டி எனக்கூறி மலேசிய சிலம்ப கழகம் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சை நம்ப வைத்து 44,800 வெள்ளி மானியம் பெற்றுள்ளது.

அனைத்துலக சிலம்ப மன்றத்தை அமைத்து அதன் மூலம் அனுமதி பெற்று போட்டியை நடத்தியதாக மலேசிய சிலம்ப கழகம் கூறி வந்துள்ளது.

ஆனால் இப்படி ஒரு அனைத்துலக சிலம்ப கழகம் அமைக்கப்படவில்லை. அதற்கு எந்த ஒரு அங்கீகாரமும் இல்லை.

ஆனால் முறையாக பதிவு செய்யப்பட்ட அனைத்துலக சிலம்ப கழகத்தின் சார்பில் இந்த போட்டி நடத்தப்படுகிறது என்று இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ மற்றும் இளைஞர் விளையாட்டு துறை ஆணையாளரை நம்ப வைத்துள்ளனர்

போலியான அல்லது தவறான தகவல்களை வழங்கி இளைஞர் விளையாட்டு துறை அமைச்சரை நம்ப வைத்தது ஒரு ஏமாற்று வேலையாகும் என விலாயா மாநில சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர் டி உதயகுமார் தெரிவித்தார்.

மேலும் இந்த போட்டியில் விலாயா மாநில சிலம்ப விளையாட்டாளர்கள் 4,540 வெள்ளி கட்டணம் செலுத்தியுள்ளனர்.

செலுத்தப்பட்ட தொகைக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான ரசிது இல்லை. அது ஒரு சாதாரண ரசிது மட்டுமே.

மேலும் இந்த சாதாரண ரசிதில் பொருளாளர் கையெழுத்து இல்லை என்று அவர் சொன்னார்.

ஒட்டுமொத்தமாக பல தில்லு முல்லு வேலைகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மலேசியாவில் சிலம்ப கலை வளர்ச்சிக்கு இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு முக்கிய பங்காற்றி வருகிறது.

நீண்ட காலத்திற்கு பிறகு சுக்மா போட்டியில் மீண்டும் சிலம்பம் இடம் பெற இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு உதவி புரிந்தது.

இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு நமக்கு பக்க பலமாக இருக்கின்ற தருணத்தில் அங்கீகரிக்கபடாத போட்டிக்காக அமைச்சை நம்ப வைத்து மானியம் பெற்றது முறைதானா என்று
விலாயா மாநில சிலம்ப கழகத்தின் 44 ஆம் ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இந்த கேள்விகளை முன் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

இதற்கு காரணமானவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். முறையான பதில்கள் இல்லை என்றால் விரைவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles