
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 3 பேர் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இதேபோல, திமுக கூட்டணியில் போட்டியிடும் கமல்ஹாசனும் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
வேட்புமனு தாக்கலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். திமுக வேட்பாளர்கள் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த கமல்ஹாசன் ஆகிய 4 பேர் இன்று காலை 11 மணிக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

