மைபெமிலி குருப் விருந்து நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் ஜூன் 4-
புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம் தலைவராக இருக்கும் மைபெமி லி குருப் விருந்து நிகழ்ச்சி கடந்த வாரம் சனிக்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஏற்பாட்டுக் குழு தலைவர் முத்தமிழ் மன்னன் – டாக்டர் தமிழ்ச் செல்வி இணைந்து இந்த விருந்து நிகழ்ச்சியை வழி நடத்தினார்.

விலாயா மாநில சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர். டி. உதயகுமார் மேற்பார்வையில் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம், ராஜா காளிமுத்து, பூக்கடை சந்திரன், அண்ணன் மாலை முனி , விஜய வாகினி இசைக் குழு தலைவர் டாக்டர் ராஜூ, லெம்பா பந்தாய் கெஅடிலான் உறுப்பினர் ரேய்மெண்ட் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

விருந்து நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களாக கலந்து கொண்ட டத்தோ இராமநாதன், ஜெயகுமார், டத்தோ மணியரசு , மகாலெட்சுமி, டாக்டர் முனியப்பா, மீனாட்சி சுந்தரம், சந்திரசேகரன் (டி.என்.பி) ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய தமிழ் கலைஞர் இயக்கத்தின் தலைவர் கே.பழனிசாமி, பங்சார் தமிழ்ப் பள்ளி வாரியத் தலைவர் டத்தோ சங்கர், கோலாலம்பூர் காது கேளாதோர் சங்கத்தின் தலைவர் சண்முகம், புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் ரவிச்சந்திரன், டேவிட், தோகையடி சண்முகம், ஜேம்ஸ், தொழில் நீதிமன்ற வழக்கறிஞர் ஹரி ராமன், இளம் தொழில் முனைவர் பாலமுருகன், டாக்டர் உதயகுமார் ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

சமூக சேவையாளர் டாக்டர் செல்வராஜ் மற்றும் டாக்டர் தமிழ்ச் செல்வி தம்பதியருக்கும் மாலைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

விஜயவாகினி இசைக் குழு தலைவர் ராஜூ, டத்தோ மணியரசு, யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம், மகாலெட்சுமி ஆகியோர் பாடல்களைப் பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles