


கோலாலம்பூர் ஜூன் 4-
அண்மையில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற கெஅடிலான் தொகுதி தேர்தலில் பல முக்கிய இந்திய வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
குறிப்பாக அம்பாங் தொகுதி கெஅடிலான் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடேசன் அமோக வெற்றி பெற்றார்.
அதைபோல் பண்டார் துன் ரசாக் கெஅடிலான் தொகுதி தேர்தலில் உதவித் தலைவர் தேர்தலில் பிரின்ஸ் ஜோனதன் வேலா வெற்றி பெற்றார்.
கடந்த வாரம் நடைபெற்ற மைபெமிலி குருப் விருந்து நிகழ்ச்சியில் நடேசன் மற்றும் பிரின்ஸ் ஜோனதன் வேலா வுக்கு சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்ட அம்பாங் ஜெயா கவுன்சிலர் மோகன்ராஜ் மற்றும் தெரத்தாய் கிராம தலைவர் சரஸ்வதி ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
இந்த விழாவில் டத்தோ இராமநாதன், ஜெயகுமார், டத்தோ மணியரசு, யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம், ராஜா காளிமுத்து, ஸ்டார் மணியம், ஷினா, முத்தமிழ் மன்னன், செல்வி, செல்வராஜா, மகாலெட்சுமி, கவுன்சிலர் மோகன்ராஜ், கவுன்சிலர் நடேசன், சந்திரசேகரன் டிஎன்பி, டாக்டர் முனியப்பா, பிரின்ஸ் ஜோனதன் வேலா, பழனிச்சாமி, தோகையடி சண்முகம், யோகேஸ்வரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

