மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் 47-ஆவது திருமுறை ஓதும் விழா!

கடந்த 01/06/2025 ஞாயிற்றுக்கிழமை தேசிய வகை வல்லம்புரோசா தமிழ்ப்பள்ளியில் மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் 47-ஆவது திருமுறை ஓதும் விழா எம்பெருமானின் ஆசியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திருமுறை விழாவில் மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் தலைவர் விவேகரத்னா அருள்நேசன் ஜெயபாலன் அவர்களின் முன்னிலையில் இவ்வாண்டு திருமுறை விழா ஏற்பாட்டுக்குழுத் தலைவரான தொண்டர்மணி மோகனகிருஷ்ணன் மாரி ஐயா அவர்களின் நேர்த்தியான மேற்பார்வை ஒருங்கிணைப்பில் இந்த திருமுறை 2025 திறப்பு விழா கண்டது.

காலை பூசையில் ம இ சங்க முன்னாள் தலைவர் தொண்டர்மாமணி முனியாண்டி முத்தன் கலந்து சிறப்பித்தார். பரிசளிப்பபு விழாவை முன்னிட்டு ம இ சங்க சிலாங்கூர் மாநிலத்தலைவர் சங்கபூசன் மனோகரன் கிருஷ்ணன், மாநில துணைப்பொருளாளர் திருமதி கோமதி, வல்லம்புரோசா தோட்டத்தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி உமாவதி, வடகிள்ளான் காவல் ஆணையர் விஜயராவ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ் வீரமன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மாண்புமிகு கணபதிராவ் பரிசளிப்பு நிகழ்ச்சியைத் திறந்து வைத்து உரையாற்றினார் .இந்த விழாவில் தேசிய வகை வல்லம்புரோசா தோட்டத்தமிழ்ப்பள்ளி , தேசிய வகை ஜாலான் ஆக்கோப் தமிழ்ப் பள்ளி,தேசிய வகை மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி, காப்பார் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம், மேரு மகா மாரியம்மன் ஆலயம் ,பத்து பெலா மதுரை வீர சுவாமி ஆலயம், கம்போங் பிரப்பாட் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம், பாரடிக்மா பாலர்ப்பள்ளி ,செரா செரிய பாலர்ப்பள்ளி, சென்யுமான் மஞ்ச பாலர்ப்பள்ளி, காப்பார் SMKTIS இடைநிலைப்பள்ளி , ரந்தாவ் பஞ்சாங் இடைநிலைப்பள்ளி, சுங்கை காப்பார் இண்டா இடைநிலைப்பள்ளி, மற்றும் காப்பார் கூட்டுப்பிரார்த்தனை* ஆகியவற்றை பிரதிநிதித்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் & பெற்றோர்கள் பங்கேற்றனர்.

பெற்றோர்கள் திரளாக தங்கள் பிள்ளைகளுடன் வந்ததுடன் பலர் தங்களால் இயன்ற உதவிகளையும் அவ்வப்போது வழங்கியது மிகச்சிறப்பு. மேலும் பெற்றோரின் முயற்சியால் வீட்டில் திருமுறை பயிற்சிகளை, மற்றும் சமய ஆசிரியர்களின் முறையாக மேற்கொண்டு சமய போதனைகளால் மாணவர்கள் போட்டியில் சிறந்த அடைவுகளைப் பெற்றனர்.

மாணவர்களை பயிற்சி அளித்த அனைத்து ஆசிரியப் பெருமக்களும் ம இ ச மாநிலத்தின் தலைவரால் கௌரவிக்கப்பட்டனர். எதிர்வரும் 3ம் திகதி ஆகஸ்டு மாதம் தேசிய வகை சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் மாநில நிலையில் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்திருமுறை விழா மிகச்சிறப்பாக நடந்தேறிடப் பெரிதும் உதவியாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles