வெளிநாட்டில் மலேசியத் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை! சட்டத்தில் திருத்தம்….

வெளிநாடுகளில் திருமணம் புரிந்து மலேசியத் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைப்பது தொடர்பில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவது தொடர்பில் பிப்ரவரி மாதத்தில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

கூட்டரசு அமைப்பு சட்டத்தின் கீழ் இப்போது வெளிநாடுகளில் பிறக்கும் மலேசிய தந்தைகளின் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது.

எங்கள் குழந்தைகளுக்கும் இதேபோல் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று மலேசிய தாய்மார்கள் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளனர்.

சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக இந்த விவகாரம் அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படும் என அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles