நீதித்துறையை அச்சுறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன!
தலைமை நீதிபதி தெங்கு மைமுன் அம்பலப்படுத்தினார்

கடந்த ஆண்டு நடைபெற்ற அரசியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சில கட்சிகள் நீதித்துறையை மிரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக தலைமை நீதிபதி தெங்கு மைமுன் இன்று பகிரங்கமாக அம்பலப்படுத்தினார்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் 2023 சட்ட ஆண்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

நீதிபதிகள் அச்சம் அல்லது விருப்பு வெறுப்பு இன்றி தொடர்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி வந்தேன்.

இருப்பினும், தெங்கு மைமுன் யாரைக் குறிப்பிட்டு பேசினார் என்பதை வெளியிடவில்லை.

கடந்த ஆண்டு, பொது நல வழக்குகளுக்கு தலைமை தாங்கும் நீதிபதிகளை மிரட்டுவது அல்லது தேவையற்ற அழுத்தத்தை கொடுக்கும் முயற்சிகள் அதிகமாக வெளிப்பட்டன.

“இந்த முயற்சிகள் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நேரடியான அவமானங்கள் என்று அவர் சாடினார்.

அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள், உண்மையில் பலர் அவர்களுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தனர் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles