வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பள்ளிச் சீருடைகள் வாங்குவதற்கு
டத்தோ ரமேஷ் ராவ் நிதியுதவி

நாட்டிலுள்ள வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள், காலணிகள் மற்றும் புத்தகப் பைகள் வாங்குவதற்கு துணைப் பிரதமரின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி டத்தோ ரமேஷ் ராவ் நிதியுதவியை வழங்க முன் வந்திருக்கிறார்.

இந்த நிதியுதவியைப் பெற சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

“இது அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு கிடையாது. எனது இத்திட்டத்திற்கு பல நல்லுள்ளங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளனர்.

அவர்களோடு சேர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறேன்”

” இந்த நிதி பள்ளி வங்கி கணக்கில் சேர்க்கப்படும். தகுதியான மாணவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இந்நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்”

பள்ளிச் சீருடைகள், காலணிகள் என்பவை ஒரு மாணவனுக்கு மிகவும் முக்கியமானவை.

இவை இல்லாவிட்டால் அந்த மாணவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இது பின்னாளில் அவனது கல்வியையேப் பாதித்துவிடும்.

இதுபோன்ற நிலை ஏற்படாதிருக்க தொடக்கப் பள்ளியில் இருந்தே இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் .

தங்கள் பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களின் விவரங்களை தலைமையாசிரியர்கள் ரமேஷ் ராவ் (012-3560105)
,டத்தோஸ்ரீ சைட் (016-3112371)ஆகியோருடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles