ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த
ராஜபக்சே உள்ளிட்ட 4பேர் கனடாவில் நுழைய தடை!

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய போரில் அப்பாவி தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவம் கொன்று குவித்தது.

இதனால் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு பேருக்கு கனடாவில் நுழைய கனடா அரசு தடைவிதித்துள்ளது.

கடந்த 2009 காலகட்டத்தில் போர் உக்கிரமான நிலையில் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் சுட்டு கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

இந்த போரின் போது மஹிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பல மனித உரிமை ஆணையங்கள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு பேருக்கு கனடாவில் நுழைய கனடா சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா அரசு தடைகளை விதித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles