உறைந்த உணவு மற்றும் தொழில் முனைவோர் உணவு பாதுகாப்பு தொடர்பாக மிஷியின் இரண்டு பயிற்சி திட்டங்கள் அறிமுகம் !

கோலாலம்பூர் ஜூன் 5-
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மலேசிய இந்திய திறன்கள் முன்முயற்சி (MiSI) இன்று இரண்டு பயிற்சித் திட்டங்களை அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக மனிதவள அமைச்சின் சிறப்பு அதிகாரி டிக்காம் லூர்ட்ஸ் தெரிவித்தார்.

உறைந்த உணவு உற்பத்தி, தொழில் நுட்பங்கள், திறன்கள் மற்றும் தொழில்முனைவோர் முதல் பயிற்சி திட்டத்தில் அங்கம் வகிக்கிறது.

தொழில் முனைவோருக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் பேக்கேஜிங் பட்டறை இரண்டாவது பயிற்சி திட்டத்தில் இடம் பெறுகிறது என்று அவர் சொன்னார்.

இன்று செராஸில் நடைபெற்ற மிஷியின் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles