

கோலாலம்பூர் ஜூன் 9-
செபூத்தே ஜாலான் ரோப்சன் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது. காலையில் நித்திய பூஜைக்கு பின்னர் பக்தர்கள் பால்குடம் ஏந்தி அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

ஆலயத் தலைவர் ராஜ புலேந்திரன் (AMN) மற்றும் துணை தலைவர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற வைகாசி திருவிழாவில்
ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா, ஆலய பொருளாளர் டத்தோ மணியரசு, அறங்காவலர் எஸ்.வி.எஸ். வேலு, பூபாலன் ஆகியோர் முக்கிய பிரமுகர்கள் பாக் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலய கட்டடக் குழு தலைவர் வழக்கறிஞர் நரசிம்மன் கூறுகையில் இந்த ஆண்டு இறுதியில் 108 படிகளுடன் ஆலயத்தின் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார்.
நிலப்பட்டாவுடன் கூடிய நிலத்தில் 15,000 சதுர அடியில் புதிய ஆலயம் காட்டப்படுகிறது என்று அவர் சொன்னார்.
ஆலயத்தின் பொருளாளர் டத்தோ மணியரசு கூறுகையில் இந்த ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு பொது மக்கள் நிதியுதவி வழங்கும் படி கேட்டுக் கொண்டார்.

