இடமாற்றம் செய்யப்பட்ட ஆலயங்கள் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுங்கள்- புது ஆலய நிர்மாணிப்பிற்கு மனு செய்யலாம்!

ஈப்போ, ஜுன். 10- பேராக்கில் புது ஆலயங்கள் நிறுவ விண்ணப்பங்கள் செய்யாலாம். விண்ணப்பம் செய்பவர்கள் முறையான ஆவணங்களை கொண்டு தங்கள் மனுவை சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்கி அனுமதி பெறுவது சிறந்த முறையாகும் என்று பேராக் மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமை, இந்திய சமூக நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

அதுமட்டுமன்றி பழைய ஆலயங்களுக்கு நிலம் வழங்கி, பணம் வழங்கி இடமாற்றும் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கி வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் உள்ள ஆலயங்கள் இடமாற்றத்தை ஏற்றுக்கொண்டு அரசாங்க கட்டளையை பின்பற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

அப்படி இடமாற்றம் செல்ல மாட்டோம் என்று அடம் பிடிக்கும் ஆலயத்தின் மீது அமலாக்க அதிகாரிகள் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். அதற்கு பேராக் மாநில அரசாங்கம் பொறுப்பல்ல என்று அவர் சொன்னார்.

இதுவரை பத்து ஆலயங்களின் நிலப்பிரச்சினைகள் தீர்வு காணப்பட்டது.

மேலும் 17 ஆலய நில விவகாரங்கள் நிலுவையில் உள்ளது. அப்பிரச்சினைகளும் விரைவில் தீர்வு காணப்படும். இதுவரை 30 ஆலயங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

எது எப்படியிருப்பினும், பேராக்கில் இனி எந்தவொரு ஆலயமும் என் அனுமதியின்றி உடைக்கப்படாது என்று அவர் உறுதியளித்தார்.

அத்துடன், பேராக்கில் 15 மருத்துவமனைகளில் 24 மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் ஆவார்கள்.

அதோடு, அனாதை பிரேதங்களை சவஅடக்கம் நவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, பேராக்கில் ஆலய தலைவர்கள் அதன் நிர்வாகத்தினர் மற்றும் ஆலய குருக்கள் பயிற்சி பட்டறை நிகழ்வினை மாநில இந்து சங்க ஏற்பாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகையால், இந்நிகழ்வை வழிநடத்த பேராக் மாநில அரசு 100,000 ரிங்கிட்டை வழங்குவதாக அவர் கூறினார்.

இச்சந்திப்பில், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார், மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் வீ.பவாணி, புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ம.துளசி, மலேசிய இந்து சங்க தலைவர் தங்க.கணேசன், பேராக் மாநில இந்து சங்க தலைவர் சுந்தரசேகரன் மற்றும் இந்து சங்க நிர்வாகத்தினர், இந்து தர்ம மாமன்றத் தலைவர் எஸ்.கிருஷ்ணன், சைவ சமய மன்ற பிரதிநிதி நாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles