
கோலாலம்பூர் ஜூன் 11-
மலாக்கா மாநில ஆளுநரின் பிறந்த நாளை முன்னிட்டு கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் கிருஷ்ணர் ஆலயத்தின் தலைவர் தங்க பெருமாளுக்கு டத்தோ எனும் உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு கிருஷ்ணர் ஆலய நிர்வாகத்தின் சார்பில் டத்தோ தங்கப் பெருமாள் தம்பதியருக்கு சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தின் அறங்காவலர் டத்தோஸ்ரீ தண்ணீர் மலை, துணை தலைவர் பிரிதிப் சிங், உதவித் தலைவர்கள் சேகரன், சிவசங்கர், செயலாளர் பரமேஸ்வரி, சட்ட ஆலோசகர் ஹரி ராமன், கமிட்டி உறுப்பினர் ஸ்டார் மணியம், வளர்மதி, ஆலயத்தின் ஆலோசகர் மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் வாரிய உறுப்பினர் டாக்டர் முனியப்பா உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

