
ஈப்போ,ஜூன்11: மலேசிய இந்தியர் மட்டுமின்றி மலேசியாவின் வரலாற்றிலும் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் வரலாற்று மாமனிதராகவும் போற்றப்படும் கூட்டுறவுத் தந்தை துன் சம்பந்தனின் 106வது பிறந்தநாள் நினைவுக்கூறல் ஈப்போவில் நடைபெறவுள்ளாது.
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்மணி இரா.மாணிக்கம் அவர்களின் முன்னெடுப்பில் துன் வீ.தி.சம்பந்தனை நினைவுக்கூறும் நிகழ்வாக அவரது பிறந்தநாள் நினைவுக்கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில்,இவ்வாண்டும் துன் சம்பந்தனின் 106வது பிறந்தநாள் நினைவுக்கூறல் வருகின்ற 16.06.2025இல் திங்கட்கிழமை மாலை மணி 4.30க்கு புந்தோங் குங்குமங்கி ஆலய மண்படபத்தில் நடைபெறவுள்ளது என ஆசிரியர்மணி மாணிக்கம் தெரிவித்தார்.
மண்ணில் மறைந்தாலும் மக்கள் மனங்களில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் துன் சம்பந்தன் நினைவுக்கூறலுக்கு முன்னாள் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தலைமையேற்க்கும் வேளையில் துன் சம்பந்தனின் மகள் வழக்கறிஞர் தேவகுஞ்சரியும் கலந்து கொள்ளும் அதேவேளையில் துன் சம்பந்தனின் சிறப்பினை எடுத்துரைக்க வருகிறார் தமிழ் அறிஞர் சுப. நாராயணசாமி அவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் துன் சம்பந்தனின் பிறந்த நாளை நினைவுக்கூறும் ஆசிரியர்மணி இரா.மாணிக்கம் கூறுகையில் நம் இனத்தின் அடையாளமாகவும் நம்மினத்தின் உயர்விற்கு தன்னையே அர்ப்பணித்தவருமான துன் வீ.தி.சம்பந்தனை தலைமுறைகள் கடந்து அனைவரிடத்திலும் அவரது சேவை,அர்ப்பணிப்பு,தியாகத்தை எடுத்துரைப்பதே இந்நிகழ்வின் நோக்கம் என்றார்.
துன் சம்பந்தன் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர்.அவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் நினைவுக்கூற வேண்டியது ஒவ்வொரு மலேசியபிந்தியர்களின் கடமை எனவும் கூறிய அவர் துன் சம்பந்தனின் 106வது பிறந்தநாள் நினைவுக்கூறல் நிகழ்ச்சிக்கு மாணவர்களும், பொது அமைப்பினர்களும்,பொது மக்களும்,அரசியல் பிரதிநிதிகளும் திரளாக கலந்து சிறப்பிக்க அனைவரையும் ஆசிரியர்மணி இரா.மாணிக்கம் அழக்கிறார்.

