
ஈப்போ,ஜூன்09: பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக சிவாலெனின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நாட்டின் தனித்துவ எழுத்தாளர்களில் ஒருவரான சிவாலெனின் கடந்த ஈராண்டு காலமாய் துணைத்தலைவராகவும் அதற்கு முன்னர் செயலவை உறுப்பினராகவும் பொறுப்பேற்றிருந்த நிலையில் புதிய தவணைக்கு தலைவராகவும் போட்டியின்றி தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரா மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் தனது எழுத்தாளர் நன்றி அறிமுகம் பெற்றவரான சிவாலெனினின் தலைமைத்துவத்தில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறந்த இலக்கை எட்டும் என்பது குறிப்பிடத்த்கக்கது.
முன்னதாக நேற்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் செயலாளராக கவிஞர் மகேந்திரன் நவமணியும் துணைச் செயலாளாராக திருமதி.இராதை சுப்பையாவும் போட்டியின்றி தேர்வான நிலையில் சங்கத்தின் புதிய பொருளாளராக திரு.ஆறுமுகமும் போட்டியின்றி தேர்வானார்.
இருப்பினும் சங்கத்தின் துணைத்தலைவர் மற்றும் செயலவைக்கு போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.
துணைத்தலைவருக்கு நடப்புச் செயலாளர் திரு.ச.முனியாண்டியும் நடப்பு பொருளாளர் திரு.சபா.கணேசுன் போட்டியிடும் நிலையில் 10 செயலவை உறுப்பினர் பதவிக்கு 11 பேர் களத்தில் இறங்கியுள்ளனர்.
முன்னதாக நடப்பு தலைவர் கவிஞர் ந.கு.முல்லைச் செல்வன் புதிய தலைமைத்துவத்திற்கும் இளையோர்களுக்கும் வழிவிட்டு மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடாமல் விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலுக்கு முனைவர் திலகவதி தலைமையேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

