
புத்ராஜெயா, ஜூன் 11 – பொதுமக்களின் MyKad அடையாள அட்டையைக் கோரவோ, வைத்திருக்கவோ அல்லது ஸ்கேன் செய்யவோ பாதுகாவலர்களுக்கு அதிகாரம் இல்லை என தேசிய பதிவு துறை (JPN) தெரிவித்துள்ளது.
1990-ஆம் ஆண்டு தேசிய பதிவு விதிமுறைகளின் கீழ் 5 வகை அதிகாரிகள் மட்டுமே அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் JPN அதிகாரிகள், காவல்துறையினர், சுங்க அதிகாரிகள், பணியில் உள்ள இராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பதிவு துறை தலைமை இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆவர்.
“ஆகவே, பாதுகாவலர்கள் அடையாள அட்டைகளைக் கோருவது அல்லது வைத்திருப்பது சட்டத்திற்கு எதிரானது மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்” என்று JPN தெரிவித்துள்ளது.
மேலும், MyKad தரவை ஸ்கேன் செய்ய மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதும் அனுமதிக்கப்படாது. இதற்கு காரணம் இது 2010 தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டது என JPN தெளிவுப்படுத்தியது.
சமீபத்தில் MyKad அட்டையை ஸ்கேன் செய்ய மின்னணு சாதனத்தை பாதுகாவலர் ஒருவர் பயன்படுத்திய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது. அதனை தொடர்ந்து. JPN இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
bernama

