புதிய ஆலயங்கள் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் வரவேற்கக்கூடியது- டத்தோ முருகையா

கோலாலம்பூர் ஜூன் 11-
பேராக் மாநிலத்தில் இனி வரும் ஐந்து ஆண்டுகளுக்கு புதிய ஆலயங்கள் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகால தடை நீக்கம் செய்யப்பட்டது பெரிதும் வரவேற்கக் கூடியது என்று ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி முருகையா தெரிவித்தார்.

பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சிவநேசன் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த வாரத்தில் சிவநேசன் கூறுகையில் இனி ஐந்து ஆண்டுகளுக்கு பேராக் மாநிலத்தில் புதிய ஆலயங்கள் கட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்றார்.

இதற்கு சமுதாயத்தின் மத்தியில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

இந்த முடிவை சிவநேசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மறுநாள் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று டத்தோ முருகையா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles