
மலேசியா சூப்பர் லீக் கிண்ணப் போட்டியில் பெட்டாலிங் ஜெயா சிட்டி கிளப்புக்கு விளையாடி முத்திரை பதித்த இளம் கால்பந்து வீரர் எம். கோகிலேஸ்வரன் தென் கொரியா கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார்.
24 வயதான இவர் தென் கொரியா லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் Chungbuk Cheongju என்ற கிளப்பில் இணைந்துள்ளார்.
தென் கொரியாவில் விளையாடும் முதல் மலேசிய கால்பந்து வீரர் இவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோகி என்று அழைக்கப்படும் கோகிலேஸ்வரன், தென் கொரியாவில் விளையாடுவது தனக்கு ஒரு பெரிய சாகசம் என்றும், அங்கு தனது ஆட்டத்தை மேம்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

