
நாட்டில் கட்டாய மரண தண்டனைக்கு பதில் மாற்று தண்டனை வழங்குவது தொடர்பான கருத்துக்களை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் இன்று தெரிவித்தார்.
முன்னாள் தலைமை நீதிபதி துன் ரிச்சர்ட் தலைமையிலான சிறப்புக்குழு தெரிவித்த கருத்துக்களும் இதில் அடங்கும்.
சிவில் அமைப்புகள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளும் வழங்கும் கருத்துக்களையும் அரசாங்கம் பரிசளிக்கும்.
விரைவில் கூடும் கூட்டத்தொடரில் இது தொடர்பான திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

