நாடு தழுவிய அளவில்
தூய்மையான தைப்பூசம்!
டாக்டர் குணராஜ் தலைமையில் பணிப்படை அமைந்தது

ரும் பிப்ரவரி 5 ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசம் மிகவும் பக்தியுடன் அதேசமயம் தூய்மையுடன் கொண்டாடும் வகையில் சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தலைமையில் பணிப்படை அமைந்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்த பணிப்படை சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறது.

இம்முறை மலேசியா இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம் உட்பட பல சமய அமைப்புகள் இந்த பணிப்படையுடன் கைகோர்த்து உள்ளன.

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு காணிக்கை செலுத்தும் வகையில் காவடிகள், முறையான உடைகள் மற்றும் உருமி மேளங்கள் அமைந்திருக்க வேண்டும்.

கண்ட கண்ட இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை வீசக் கூடாது.

ஆங்காங்கே வைக்கப்படும் குப்பை தொட்டியில் குப்பைகளை போடுங்கள்.

தைப்பூசத்தன்று ஆலய வளாகத்தில் மதுபானங்கள் விற்கத் கூடாது என்று பணிப்படை கேட்டுக் கொண்டுள்ளது.

மக்கள் போற்றும் ஒரு சுத்தமான மற்றும் ஒரு உன்னத சமய விழாவாக தைப்பூசம் விளங்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் மற்றும் டாக்டர் குணராஜ் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles