வெற்றி பெற வைத்த இந்திய சமுதாயத்தை மறந்து விடாதீர்கள்!
அரசாங்கத்திற்கு டாக்டர் இராமசாமி வேண்டுகோள்

கடந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றிக்கு இந்திய சமுதாயம் மிகப்பெரிய அளவில் ஆதரவை வழங்கியது.

இதன் வழி இன்று நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி ஏற்றுள்ளார்.

இன்று ஆட்சி பீடத்தில் அமர்ந்து இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் இந்திய சமுதாயத்தை மறந்து விடக் கூடாது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசாங்கத்தில் இந்தியர்களுக்காக குரல் எழுப்ப தனிக் கட்சிகள் இல்லை.

இந்நிலையில் எந்த காரணத்தைக் கொண்டும் இந்திய சமுதாயம் புறக்கணிக்கக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles