மொகிதீனை னை பிரதமராக ஆதரித்த தேசிய முன்னணி எம்.பி.க்களின் பெயர்களை வெளியிட்டார் அகமட் ஜாஹிட் ஹமிடி

பொதுத் தேர்தலுக்குப் பிறகு பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் மொகிதீன் யாசினை ஆதரித்து கையெழுத்திட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அம்னோ சிறப்பு மாநாட்டின் போது அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி வெளிப்படுத்தினார் என்று அம்னோ வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஜாஹிட் பெயர்களை பட்டியலிட்டதால், மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க தேசிய முன்னணி ஆதரவு வழங்கியது.

ஆனால் பத்து தேசிய முன்னணி எம்பிக்கள் தீடீரென மொகிதீன் யாசினுக்கு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை துரோகம் செய்த இந்த 10 எம்பிக்கள் மீது தேசிய முன்னணி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று அம்னோ மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles