
கடந்த பொதுத்
தேர்தலில் அம்னோ கண்ட மோசமான தோல்விகளுக்கு அம்னோவில் ஏற்பட்ட பிளவுகள் முக்கிய காரணம்.
தனிமனித தாக்குதல், பண்பைக் கொலை செய்தல், தலைவரின் நம்பகத்தன்மையை அழிப்பது போன்ற உத்திகள் எந்த ஒரு அமைப்பையும் பலவீனப்படுத்துவதற்கும் அடிபணியச் செய்வதற்கும் மிக சக்திவாய்ந்த ஆயுதமாகும்.
அந்த வகையில் கட்சிக்கு துரோகம் இழைத்த நம்பிக்கை துரோகிகளை அம்னோவில் இருந்து தூக்கி எறியுங்கள் என்று அம்னோ இளைஞர் பகுதி தலைவர் அஸ்ராப் வாஜிடி டூசுக்கி தெரிவித்தார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கைரி ஜமாலுடின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அம்னோ தலைவர்களை நேரடியாக தாக்கியதை குறி வைத்து இவரின் உரை அம்னோ மாநாட்டில் அமைந்திருக்கிறது.

