பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம்; தமிழக சட்டமன்ற தேர்தலில் 78 தொகுதிகளை கேட்கும் பாஜ: அதிமுக தலைவர்கள் குய்யோ… முய்யோ…

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து 78 தொகுதிகளை பெறவேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் அதிமுக தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இவரது கடிதம் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள், தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிமுக – பாஜக கூட்டணியை உடைக்கும் செயலாக இருப்பதாகவும், அவர் மீது பாஜக உடனடியாக நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கூறியுள்ளனர்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய ஆதரவாளரும், அதிமுக வக்கீலுமான மணிகண்டன் கூறியதாவது: அண்ணாமலையின் முக்கிய நோக்கமே, பாஜக அதிமுக கூட்டணி வரக்கூடாது என்பது தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி உடைய முக்கிய காரணமே அண்ணாமலைதான். வானத்தை வில்லாக வளைப்பேன் என பிரதமர் மோடியிடம் பேசினார். இவரது பொய்யான பேச்சை நம்பிய டெல்லி தலைமை, தனியாக போட்டியிட வைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles