தேசிய அளவிலான புட்சால் போட்டியில் புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளியின் பெண்கள் அணியினர் மகத்தான வெற்றி!

ஈப்போ, ஜுன்.13: தேசிய அளவிலான 12 வயதிற்குட்பட்ட புட்சால் போட்டி கெடாவில் நடைபெற்றது. இப்போட்டியில் பேராக் மாநிலத்தை பிரதிநிதித்த புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளியின் பெண்கள் அணி வெற்றி வாகை சூடியது.

பேராக் மாநிலத்தை பிரதிநிதித்து இரு பள்ளிகளின் பெண்கள் அணியினர் கலந்துக்கொண்டனர். அவர்களில் புருவாஸ் தமிழ்ப்பள்ளியும், அரசினர் தமிழ்ப்பள்ளியும் குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை கண்டு பெருமிதம் கொள்வதாக இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இரா.ஜெயசீலன் கூறினார்.

தேசிய அளவில் சுங்கை பட்டாணியில் நடைபெற்ற இப்போட்டியில் பெண்கள் பிரிவில் 12 குழுக்களும் ஆண்கள் பிரிவில் 24 குழுக்களும் பங்கேற்றன. பெண்கள் பிரிவில் சுங்கை பட்டாணியின் பழனிச்சாமி பிள்ளை தமிழ்ப்பள்ளியை புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளி தோற்கடித்து சாம்பியனானது.

இப்போட்டியில் பெண்கள் பிரிவில் சிறந்த கோல் காவலளராக அரசினர் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த டவிஷா சுரேஸ் தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்கள் பிரிவில் பேராக்கை பிரதிநிதித்த தெலுக் இந்தான் பாரதி தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles