
கோலாலம்பூர் ஜூன் 15-
இன்று உலக முழுவதும் தந்தையர் தின கொண்டாட்டம் மிகவும் களைக்கட்டி இருக்கிறது.
அந்த வகையில் தந்தையர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்று கம்போங் அத்தாப்பில் உள்ள பிபிபி கட்சியின் தலைமையகத்தில் கேக் வெட்டி தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மற்றும் துணை தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி ஆகியோர் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பிபிபி கட்சியின் செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, பினாங்கு மாநில தலைவர் ஜெயராமன், ஜொகூர் மாநில தலைவர் கிருஷ்ணன், மலாக்கா மாநில தலைவர் ஜெயசீனா, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன், தகவல் பிரிவு துணை தலைவர் குமார் உட்பட உச்சமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

