
பத்துகாஜா,ஜூன் 15-
நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்கும் நன்புரிதலுக்கும் உலகளாவிய நிலையில் மலேசியா முன்மாதிரியாக திகழ்வதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் தெரிவித்தார்.
பல்லினம் வாழும் நம் நாட்டில் மதம்,இனம்,மொழி கடந்து நாம் அனைவரும் மலேசியர்களாய் வாழ்வதே இந்நாட்டின் தனித்துவ பெரும் சிறப்பு என்றார்.
பெம்பான் மெதடிஸ் தேவாலயத்திற்கு வருகை புரிந்திருந்த பின்னர் சிவகுமார் இதனை குறிப்பிட்டார்.
முன்னதாக தேவாலயத்தின் அருகில் புதிதாக எழுப்பப்படவிருக்கும் மண்டபம் குறித்து கேட்டறிந்த அவர் தேவாலயத்தின் நிர்வாகம் மேற்கொள்ளும் இப்பணி சிறக்க தன்னால் இயன்ற பங்களிப்பை செய்வதாகவுன் உறுதி அளித்தார்.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக வெ.10ஆயிரத்தை மானியமாகவும் அவர் வழங்கினார்.
கட்டப்படவிருக்கும் மண்டபம் இவட்டார சமூக செயல்பாடுகளுக்கு பெருன் பங்களிப்பு செய்யும் என தாம் நம்புவதாகவும் கூறிய அவர் இவ்வட்டார சமூக செயல்பாடுகள்,பண்பாடு,கலை உட்பட சமய நல்லெண்ண முன்னெடுப்புகள் என அனைத்து நிலைகளிலும் இம்மண்டபம் அதன் தனித்துவ தன்மையோடு இயங்கும் என்றும் விவரித்தார்.
முன்னதாக,தேவாலய நிர்வாகம் மாண்புமிகு சிவகுமார் அவர்களுக்கு நன்றி பகிர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

