

ஈப்போ,ஜூன்15: இந்திய இளைஞர்களிடையே அரசு வேலை குறித்த தாக்கமும் ஈர்ப்பும் இன்றைக்கும் அதிகமாக இருந்தாலும் தங்களின் எதிர்காலத்தை வியபாரத்தில் உயர்த்தி கொள்ள அவர்கள் காட்டும் முனைப்பும் ஆர்வமும் பெருமிதமாக இருப்பதோடு வருங்கால தலைமுறையின் எதிர்காலம் நம்பிக்கையான இலக்கை நோக்கி நகர்வதையும் காண முடிவதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் குறிப்பிட்டார்.
இன்றைய நிலையில் பெரும்பான்மையான குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சியும் மேம்பாடும் இளம் தலைமுறையை நம்பி இருக்கும் நிலையில் அரசு மற்றும் தனியார் நிர்வனங்களின் வேலைக்காக காத்திருக்காமல் விவேகமான முறையில் சிந்தித்து வியபாரத்தில் ஈடுப்படுவதை கண்டு தாம் பெருமிதம் கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளையில்,நமது இந்தியப் பாரம்பரியம் சார்ந்த உணவு,ஜவுலி,கலை உட்பட நமது பண்பாட்டையும்,கலாச்சாரத்தையும் மெய்ப்பிக்கும் வியபாரங்களில் இளையோரின் ஈடுபாடு தன்னை வெகுவாக கவர்ந்திருப்பதாகவும் கூறிய அவர் வருங்காலத்தில் இந்தியச் சமுதாயத்தின் பொருளாதார மேம்பாடும் வளர்ச்சியும் இளையோரின் வியபார முன்னெடுப்புகளில் அடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈப்போ பாஃலிம் ஏயோன் பிஃக் பேராங்காடியில் “Colours of India” ஏற்பாட்டில் நடைபெற்ற அனைத்துலக இந்தியப் பாரம்பரிய வியபாரம் மற்றும் உணவு திருவிழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேசுகையில் செய்தியாளர் சந்திப்பில் சிவகுமார் இவ்வாறு நினைவுறுத்தினார்.
முன்னதாக நடப்பில் வியபாரத்தில் ஈடுப்படும் இளையோர்கள் வங்கி கணக்கு,தேவையான ஆவணங்கள்,முறையான வியபார உரிமை ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,.
அது அவர்களின் வியபார மேன்மைக்கு வித்திடுவதோடு வங்கி கடனுதவிக்கும் அரசாங்கத்தின் வியபார கடனுதவிக்கும் பெரும் துணைபுரியும் என்பதையும் சுட்டிக்காண்பித்தார்.
கடந்த காலங்களைக் காட்டிலும் நடப்பில் நமது இந்தியப் பாரம்பரியம் சார்ந்த வியபாரத்திற்கும் உணவு சார்ந்த வியபாரத்திற்குமான தளம் விரிவடைந்திருப்பதாகவும் அதனை நன்முறையில் பயன்படுத்தி இளையச் சமுதாயம் தங்களின் பொருளாதார ரீதியிலான வாழ்வியலை உயர்த்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

