
கோலாலம்பூர் ஜூன் 15-
கைத்தொலைபேசி தரவுகளை சேகரிப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
மலேசிய தகவல் மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) கைப்பேசி சேவை நிறுவனங்களிடமிருந்து (MNO) பெறும் இந்த தரவுகள் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் 2010 (Akta 709)க்கு நேரடியாக முரணாக இரக்கிறது.
அரசின் திட்டமிட்ட யோசனைக்கிணங்க, 2025 முதல் காலாண்டுக்கான பேச்சு பதிவு மற்றும் இணையம் பயன்படுத்தும் தகவல்களை சேகரிக்க MCMC MNO நிறுவனங்களை அழுத்துவது, பயனரின் ஒப்புமை இன்றி தனிப்பட்ட தகவல்களை பகிரும் அபாயகரமான நடவடிக்கை என அவர் சாடினார்.
இது பொதுமக்கள் மீதான நம்பிக்கையை சிதைக்கும் செயல் என்றும் தெரிவித்தார்.
“Whoscall” வருடாந்தம் வெளியிட்ட அறிக்கையில் 2024ஆம் ஆண்டு மலேசியா ஆசியாவிலேயே அதிகமான தனிப்பட்ட தரவுகள் கசியும் நாடாக காணப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
அதே அறிக்கையில், 72.5% பயனர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருப்பதை உணர்ந்ததாகவும், RM1.57 பில்லியன் நஷ்டம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
தனிநபர் தரவுகள் குறித்து தரவுகள் கசிவது அது சம்பந்தப்பட்டவர்களை பெரிதும் பாதிக்கும் என்றார்.
ஆகையால் தனிநபர் தரவுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

