

ஈப்போ, ஜுன்.16: பேராக் மாநில இடைநிலைப்பள்ளி இடையிலான 10 வது ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை பேராக் மாநில இளைஞர் மேம்பாட்டு இயக்கம் பத்தாவது ஆண்டாக நடத்துவதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும், இயக்க தலைவருமான கோ.சண்முக வேலு கூறினார்.
ஆண்கள் பிரிவில் 24 குழுக்களும் பெண்கள் பிரிவில் 12 குழுக்களும் விளையாடின. அவற்றில் பெண்கள் பிரிவில் துரோங் தாட் பிங் இடைநிலைப்பள்ளி மாணவிகள் சாம்பியனாக வாகை சூடினர்.
ஆண்கள் பிரிவில் ஊத்தான் மெலிந்தாங் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் வாகை சூடின.
இந்த கபடி சங்கம் நிதி பற்றாக்குறை பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு துணை பிரதமரின் ஆதரவோடு இரவு விருந்தோம்பல் நிகழ்வு ஒன்று விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று துணப்பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி இந்த கபடி போட்டியை தொடக்கி வைத்தபோது கூறினார்.
அதுமட்டுமின்றி, இன்று நடைபெறும் போட்டிக்கு 12 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்தார்.
இப்போட்டியின் வாயிலாக விளையாட்டாளர்கள் சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்.
இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி மென்மேலும் இந்நாட்டில் செழித்தோங்க நாம் அனைவரும் அவர்களுக்கு உதவுவோம் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

கபடி போட்டி அனைத்துலக விளையாட்டாக இருந்து வருகிறது. குறிப்பாக, இந்நாட்டு இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய இளைஞர்கள் தீவிர முனைப்பு காட்டுவது அவசியமாகும்.
இவ்விளையாட்டு வாயிலாக மாணவர்கள் சிறந்த கட்டொழுங்கு கொண்டவர்களாக திகழ்வதோடு, அவர்களின் வாழ்வாதாரம் சிறந்து விளங்கும் என்று இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் கலந்துக் கொண்டபோது ம இ கா வின் தேசிய உதவித்தலைவரும், பேராக் மாநில மஇகா தலைவருமான டான்ஸ்ரீ எம். இராமசாமி கூறினார்.
அத்துடன், இப்போட்டி 10 ஆண்களாக சிறப்பாக வழிநடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் இப்போட்டியில் பங்குபெறும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது.

அதன் பொருட்டு இவ்வாண்டு 5 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக அவர் தெரிவித்தார். இப்போட்டி ஈப்போ ஸ்டேடியம் இந்திரா மூலியாவில் நடத்துவதற்கு உதவிய பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரனி முகமடடிற்கு நன்றி.
இடைநிலைப்பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், இயக்கங்கள், நன்கொடையாளர் கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்து க்கொண்டார் பேராக் ம இ கா செயலாளரும், ஏற்பாட்டுக்குழு தலைவருமான கோ.சண்முகவேலு.
இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் பெண்கள் பிரிவில் முதலாவதாக துரோங் தாட் பிங் இடைநிலைப்பள்ளி, இரண்டாவது கொன்வன் பி, மூன்றாவது கொன்வன் ஏ, நான்காவது பாகான் செராய் இடைநிலைப்பள்ளியாகும்.
ஆண்கள் பிரிவில் முதலிடம் வென்ற பள்ளி ஊத்தான் மெலிந்தாங் இடைநிலைப்பள்ளி, இரண்டாவது தஞ்சோங் மாலிம் கெத்தலிக் பள்ளி, மூன்றாவது தைப்பிங் கிங் எட்வட், நான்காவது தெலுக் இந்தான் சென் அந்தோணி இடைநிலைப்பள்ளியாகும்.
இப்போட்டியில் வெற்றிப்பெற்ற குழுவினருக்கு வெற்றிக்கிண்ணம், நினைவு சின்னங்கள், ரொக்கம் மற்றும் ஜேசிகள் 1 முதல் 8 வது இடம் வென்ற குழுக்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

