உள் புற பகுதிகளில் உள்ள கிளினிக்குகளுக்கு அம்புலன்ஸ் வாகன பற்றாக்குறை ! தீர்வுக்கான நடவடிக்கை -சிவநேசன் தகவல்!

பேரா மாநிலத்தில் நகர் புறத்தில் இருந்து உள் புற பகுதியில் உள்ள கிளிக்குகள் எதிர்நோக்கும் அம்புலன் பற்றாக் குறையை போக்க அரசாங்கம் தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பேரா மாநில சுகாதாரம், மனிதவளம், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய சமூக விவகாரங்கள் தலைவர் அ. சிவநேசன் கூறினார்…

பேரா மாநிலத்தில் மட்டும் அல்ல நாட்டில் குறிப்பாக உள் புற மற்றும் கிராம புறங்களில் அம்புலன்ஸ் பற்றாக் குறை உள்ளதை அரசாங்கம் உணர்ந்துள்ளது.

அதன் தேவைகளை நிறைவு செய்ய அதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்

இன்று ( 17- 6- 25,) சிலிம் ரிவர் , பெசவுட் கிளினிற்கு அம்புலன்ஸ் வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டப் பின்னர். அவர் இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த கிளினிக்கில் இருந்த அம்புலன்ஸ் கடந்ந 2023:இல. பழுதடைந்து விட்டது.

அந்த மருத்துவ மனை சிலிம் ரிவர் மருத்துவ மனையில் இருந்து வெகு தூரம் உள்ளதால் அவசர வேளைகளில் நோயாளிகளை வெளியில் கொண்டு வர பெரும் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆகவே அதன் தேவைக்கு அம்புலன் வழங்கப்பட்டுள்ளது. பேரா மாநிலத்தில் அம்புலன்ஸ் தேவைப்படும் கிளினிக்குகளுக்கு உதவிகள் கிடைக்க தொடர நடவடிக்கையை எடுத்து வருவதாக சிவநேசன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles