கே. ரகு கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்திற்கு Red Dragon FC – Royal Squad FC தேர்வு!

பிறை, ஜூன் 16-
பிறை எம்பிபிகே, பினாங்கு இந்தியன் எஃப்.சி மற்றும் பிறை சட்டமன்ற தொகுதி ஆகியோருடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட கே. ரகு கிண்ண 2025 கால்பந்து போட்டி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த போட்டியில் நமது இளம் கால்பந்து பெண்களின் ஆர்வம், திறமை மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்தியது மிகவும் பாராட்டுக்குரியது என்று பிறை எம்பிபிகே தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், Thunder Cats FC மற்றும் Red Dragon FC அணிகள் பரபரப்பான மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடித்தன. தண்டர் கேட்ஸ் எஃப்சி அணிக்காக யோகினி (#10) கோல் அடித்தார்.

ரெட் டிராகன் எஃப்சி அணிக்காக ஜீவேதா (#17) கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தினார். ஆட்டம் டிராவில் முடிந்ததால் ஐந்து போட்டி பெனால்டி ஷூட் அவுட் மூலம் முடிவு செய்யப்பட்டது.

இறுதியில் ரெட் டிராகன் எஃப்சி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லேடி டைகர் எஃப்சி மற்றும் ராயல் ஸ்குவாட் எஃப்சி அணிகள் மோதின. நோவிஷாவின் (#23) அற்புதமான கோல் ராயல் ஸ்குவாட் எஃப்சி அணியின் வெற்றியை உறுதி செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

வரும் ஜூலை 29 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு Padang Taman Kimsar Prai திடலில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ரோயல் ஸ்குவாட் மற்றும் ரெட் டிராகன் அணிகள் மோதுகின்றன. பொதுமக்கள் திரண்டு வந்து இறுதி ஆட்டத்தை கண்டுபிடிக்க வரும்படி ஸ்ரீ சங்கர் கேட்டுக் கொண்டார்.

இந்த போட்டி மூலம் இந்திய பெண்களை மேம்படுத்துவதில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காகபினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ, பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி மக்கள் சேவை மையம், மற்றும் பினாங்கு இந்தியன் FC ஆகிய அனைத்து ஆதரவாளர்களுக்கும் MPKK பிறை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் சொன்னார்.

இறுதிப் போட்டியில் நமது இளம் சாம்பியன்களை உற்சாகப்படுத்த நாம் ஒன்று கூடுவோம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles