உலு சிலாங்கூர் மாவட்ட ஏற்பாட்டில் வெற்றிகரமாக நடைபெற்ற சிலம்ப நடுவர் & பயிற்சியாளர் பாடநெறி 2025!

கோலகுபு பாரு, ஜூன் 16-
சிலம்பம் விளையாட்டில் தொழில்முறை பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களாக மாறக்கூடிய வர்களுக்கு பயிற்சி அளித்து அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட சிலம்பம் நடுவர் மற்றும் பயிற்சியாளர் பாடநெறி 2025 உலு சிலாங்கூர் மாவட்ட சிலம்பம் சங்கம் ஏற்பாட்டில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்த சிலம்ப நடுவர் மற்றும் பயிற்சியாளர் பாடநெறி பட்டறையை நடத்தியதில் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று உலு சிலாங்கூர் மாவட்ட சிலம்ப கழகத் தலைவர் திருமதி திலகேஸ்வரி தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப் பட்ட மொத்தம் 15 பங்கேற்பாளர்கள் இந்தப் பாடநெறியில் கலந்து கொண்டனர்.

சிலம்ப போட்டியில் வழங்கப்படும் தீர்ப்பின் புள்ளிகள் மற்றும் நுட்பங்களை ஆழமாக வெளிப்படுத்தும் வகையில் இந்த பட்டறை வடிவமைக்கப்பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலருமான அவர் சொன்னார்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக மாற்றுவதில் வலுவான ஆதரவையும் அர்ப்பணிப்பையும் வழங்கிய உலு சிலாங்கூர் மாவட்ட சிலம்பம் சங்கத்தின் தொழில்நுட்பத் தலைவர் மாஸ்டர் கே. சக்திவேல் அவர்களுக்கு நன்றி.

பெட்டாலிங் மாவட்ட சிலம்பம் சங்கத்தின் தலைவர் மாஸ்டர் பி. லோகநாதன், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கான சிறப்புப் பயிற்சி அமர்வில் கலந்து கொண்டு தனது நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் பங்களிக்க நேரம் ஒதுக்கியதும் பாராட்டுக்குரியது.

இந்த பாடநெறி பட்டறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு அளித்த
OH YEAH Banana Leaf உணவகத்திற்கும் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles