

கோலாலம்பூர் ஜூன் 18-
மறைந்த ம இகா முன்னாள் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் நல்லுடலுக்கு உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் மற்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் சைபுடின், உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரன் ஆகியோர் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
டத்தோஸ்ரீ பழனிவேல் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர்.
இவரின் மறைவு இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பு என்று டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்

