கல்வியில் எந்தவொரு இனமும் பின்தங்கி விடக்கூடாது! நூருல் இஸா அன்வார் கூறுகிறார்

நீலாய் ஜூன் 21-
நாட்டில் கல்வி துறையில் எந்தவொரு இன மாணவரும் பின் தங்கி விடாது.

அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும். அந்த வகையில் இந்த ஆட்சியில் கல்வியில் எந்தவொரு இன மாணவரும் புறக்கணிக்கப்பட மாணவர்கள் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணை தலைவர் நூருல் இஸா அன்வார் தெரிவித்தார்.

கல்வி என்பது ஒரு மாணவரின் எதிர்காலத்திற்கு அடித்தளம்.
கல்வி மட்டுமே ஒரு மாணவரின் சிறப்பான காலத்தை முடிவு தீர்மானிக்கும்.

ஆகவே அனைத்து மாணவர்களும் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும்.

ஆரம்பப் பள்ளியை முடித்து விட்டு இடைநிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கல்வியை பாதியிலேயே கைவிடுவது வேதனையை அளிக்கிறது. இதற்கும் நல்ல முறையில் தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.

இதனிடையே நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் எதிர் நோக்கி இருக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட தரப்புகள் முன் வர வேண்டும்.

நானும் இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவேன்.
லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற போது நான் பங்சார் தமிழ்ப் பள்ளிக்கு காலடி எடுத்து வைத்தேன்.

பொறுப்பில் இருப்பவர்கள் தமிழ்ப் பள்ளி உட்பட அனைத்து மொழி பள்ளி விவகாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நீலாய் ஸ்பிரிங் ரிசோர்ஸ்ட் விடுதியில் தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியக் கூட்டமைப்பின் 4 ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு நூருல் இஸா உரையாற்றினார்.

இந்த மாநாடு ஒரு மிகச்சிறந்த மாநாடு என்பதோடு தமிழ்ப் பள்ளிகள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் என்றார்.

மேலும் நாட்டில் உள்ள ஐந்து தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவ அரசாங்கம் மானியம் அங்கீகரித்துள்ளது பாராட்டுக்குரியது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles