

நீலாய் , ஜூன் 21-
நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் எதிர் நோக்கி இருக்கும் சவால்கள் மிகவும் மோசமாக உள்ளது.
தற்போது
மொத்தம் தமிழ்ப்பள்ளிகள் உள்ளன . இதில் 528
அரசு பள்ளிகள் 165 (31%).
அரசு உதவி பெற்ற பள்ளிகள்: 363 (69%).
தமிழ்ப் பள்ளிகளில் பயிலும்
மொத்தம்
மாணவர்கள் எண்ணிக்கை 75,649.
மொத்தம் ஆசிரியர்கள் 8,511
528 தமிழ்ப் பள்ளிகளில் 150க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட தமிழ்ப் பள்ளிகள் 383 ஆகும்.
இதில்
30க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட தமிழ்ப் பள்ளிகள் 145.
குறைவான மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் எதிர்காலம் மிகவும் மோசமாக உள்ளது.
குறிப்பாக 100 முதல் 150
தமிழ்ப்பள்ளிகள் வரும் காலத்தில் மூட வோய்ப்பு உள்ளது என்று தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியக் கூட்டமைப்பு குழு செயலாளர் சுப்ரமணியன் இராகவன் தமது கட்டுரை படைப்பில் தெரிவித்தார்.
தமிழ்ப் பள்ளி விவகாரம் இந்திய சமுதாயத்தில்
மாபெரும் எதிர்ப்பு கிளம்பலாம்.
இட மாற்றத்திற்கு நிலம் மற்றும் நிதி இல்லாமை பெரும் குறையாக உள்ளது
தற்போது ஆட்சியில் உள்ள மடானி அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன் வர வேண்டும்.
குறிப்பாக 13 ஆவது மலேசிய திட்டத்தில் (
Rancangan Malaysia ke 13) வருடத்திற்கு 100 மில்லியன் ஒதுக்கினால் படிப்படியோக தமிழ்ப்பள்ளி
பிரச்சினைகள் தீர்க்கலாம் என்று அவர் சொன்னார்.
தமிழ்ப்பள்ளி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தனி குழு (Jawatankuasa Khas)
தேவைப்படுகிறது என்று இன்று நீலாய் ஸ்பிரிங் ரிசோர்ஸ்ட் விடுதியில் தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியக் கூட்டமைப்பு 4 ஆவது தேசிய மாநா்டில் கட்டுரை சமர்ப்பித்தபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக் கூட்டமைப்பு தலைவர் இராசமாணிக்கம் கருப்பையா, ஏற்பாட்டுக் குழு தலைவர் மு.காளிதாசன், பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ மற்றும் கெஅடிலான் கட்சியின் தேசிய துணை தலைவர் நூருல் இஸா அன்வாரும் கலந்து சிறப்பித்தனர்.

