வரலாற்று சிறப்புமிக்க நாள் – பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மலேசியத் தமிழர் பெருமை

2025 ஜூன் 18 ஆம் தேதி, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரலாற்றுப் பூர்வமான சிறப்பு விருதளிப்பு விழாவில், லண்டன் கிரைடன் துணை மேயர் முகமது இஸ்லாம் அவர்களின் கரங்களில் இருந்து, மலேசிய முத்தமிழ் சங்கம் சார்பில் இந்தக் கௌரவச் சிறப்பைப் பெற்றது எனக்கு ஒரு மறக்கமுடியாத பெருமையான தருணமாக அமைந்தது.

மலேசிய பிரதிநிதி ஒருங்கிணைப்பு தலைமை பொறுப்பேற்று மலேசியாவிலிருந்து வந்த மேலும் தமிழ்ச் சங்கங்கள் மற்றும் கல்வி அறநிலையங்களுக்குச் சேர்ந்த நால்வர் இந்தக் கௌரவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மாபெரும் நிகழ்வில் 24 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பேர், தங்களின் தமிழ்ப் பணி, குடும்ப முன்னேற்றம் மற்றும் சமூகநலச் சேவைகளுக்காக பாராட்டப்பட்டனர்.

இவ்விழாவில் ஐந்து பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிரைடன் துணை மேயர் நேரில் பங்கேற்று, நிகழ்ச்சியின் அருமையை மேலும் உயர்த்தினார்கள்.

இந்த மகத்தான விழாவை, கிரைடன் தமிழ்சங்கம் மற்றும் ஆலந்தூர் கவிஞர் மோகனரங்கம் அறக்கட்டளை இணைந்து சிறப்பாக நடத்தினர் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன்.

நான் பெற்ற இந்த கௌரவத்தை, உலகம் முழுவதும் தமிழுக்காக தன்னலமின்றி உழைக்கும் ஒவ்வொரு தமிழ்த் தொண்டருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!
வெல்க தமிழர்கள்!

அன்புடன் டத்தோ டாக்டர் முத்து ரத்தினம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles