
கோலாலம்பூர்,ஜூன்24: நேற்று நடைபெற்ற ஜசெகவின் மத்தியச் செயலவை உறுப்பினர் நியமனத்தில் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் இடம் பிடித்துள்ளார்.
அவரது இந்த நியமனம் ஜசெக மத்தியிலும் இந்தியச் சமுதாயத்தின் மத்தியில் நன் வரவேற்பை பெற்றுள்ளது.
கட்சியில் தமிழ் பேசும் ஒரு தலைவரை மத்தியச் செயலவைக்கு நியமனம் செய்திருப்பது இந்தியச் சமுதாயத்தின் நலன் சார்ந்தும், திட்டங்கள்,உருமாற்றங்களைக் கவனத்தில் கொண்டும் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
நியமனம் செய்யப்பட்ட தமிழ்ப் பேசும் பிரதிநிதிகளில் சிவகுமாரை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கட்சியின் மத்தியில் மட்டுமின்றி இந்தியச் சமுதாயத்தின் மத்தியிலும் தேசிய நிலையிலான இந்தியத் தலைவராக அறியப்படும் சிவகுமாரின் இந்நியமனம் இந்தியச் சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு ஜசெக முன்னெடுத்த் தூரநோக்கு திட்டமாக பார்க்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
சிவகுமாரின் இந்த நியமனம் அவருக்கு தேசிய நிலையில் இந்தியச் சமுதாயத்தை நுண்ணியமாய் ஆராய்ந்து இந்தியச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மட்டுமின்றி தூரநோக்கு செயல்பாடுக்கும் வழிகோலும் வகையில் ஆக்கப்பூர்வமான திட்டங்களை அடிப்படையாக கொண்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
கட்சி ரீதியில் அவரது இந்நியமனம் இந்தியச் சமுதாயம் எதிர்நோக்கும் சிக்கல்களை களையவும் கல்வி,பொருளாதாரம்,சமயம்,வாழ்வாதாரம் என அனைத்தையும் இன்னும் கூடுதலாக அவர் கண்காணிக்கும் கடமை அவரை வந்து சேரலாம் என கருத்துரைக்கப்படுகிறது.
இந்தியச் சமுதாயத்தின் எதிர்பார்ப்பு,தேவைகள்,அவசியம் என பலகோணங்களில் திட்டவரைவுகளை மேற்கொள்ளவும் அதனை நேர்த்தியாய் ஒழுங்குப்படுத்தவும் மாண்புமிகு சிவகுமார் தேசிய நிலையிலான தமிழ் பேசும் இந்தியத் தலைவர் என்னும் நிலையில் தனக்கான அடுத்தக்கட்ட துரிதமான நடவடிக்கைகளை தொடர்வதற்கு இந்த நியமனம ஒரு அடித்தளமாக அமையலாம் என தெரிய வந்துள்ளது.
மலேசிய அமைச்சரவையில் தமிழ் பேசும் இந்தியத் தலைவர் இல்லை என்னும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஜசெகவின் இந்நியமனம் திகழ்கிறது.
இந்த நியமனத்தின் பின்னனியில் தேசிய அளவில் ஓர் இந்தியத் தலைவரை அடையாளம் காட்டவும் அவரது தலைமைத்துவத்தில் இந்தியச் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்குத் தீர்வு ஏற்படுத்தவும் ஜசெக திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்தியச் சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதிலும் அதனை சரியான நிலைக்கு உயர்த்துவதிலும் சிவகுமார் தனித்துவமானவர்.அவரிடம் பல திட்டங்களும் செயல்பாடுகளும் உண்டு.பல நேரங்களில் அதனை அவர் வெளிப்படுத்தியும் உள்ளார்.
இந்நிலையில்,ஜசெக அதன் மத்தியச் செயலவை உறுப்பினராக அவரை நியமனம் செய்திருப்பது இந்தியச் சமுதாயத்தின் உருமாற்றத்திற்கு வித்திடலாம் என்பது பொதுவான கருத்தாக அமைந்துள்ளது.
சிவகுமார் தலைமையில் இந்தியச் சமுதாயத்தின் எதிர்காலம் நிர்ணயம் செய்ய ஏதுவாகவே அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனலாம்.
மொழி,இனம்,கலை,பண்பாடு,பொருளாதாரம்,கல்வி என இந்தியச் சமுதாயத்தின் ஒவ்வொரு எண்ணத்தையும் ஆழமாய் சிந்திக்கும் சிவகுமாரின் நியமனம் இந்தியச் சமுதாயத்திற்கு ஏதோவொரு விடியலை ஏற்படுத்தப்போகிறது என்பதை இந்த நியமனம் உணர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியச் சமுதாயத்தின் நம்பிக்கையான எதிர்காலத்திற்கு சிவகுமாரின் இந்த நியமனம் திகழ்வதோடு அதற்கான மூலதனமாகவும் இந்நியமனம் விளங்குகிறது என்பது அனைவரின் சிந்தனையாகவும் அமைந்துள்ளது.

