
கோலாலம்பூர் ஜூன் 25-
ஏய்மஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 786 மாணவர்களுக்கு மஇகாவின் தேசியத் தலைவரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டான்ஶ்ரீ டாக்டர் எஸ்.ஏ விக்னேஸ்வரன் எம்ஐடி மூலம் காசோலையினை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
இதில் நமது இனத்தைச் சேர்ந்தவர்கள் தவறான கண்ணோட்டத்தை புலனத்திலும் தனிப்பட்ட முறையில் பேசி வருவது வேதனையை அளிப்பதாக செபூத்தே தொகுதியைச் சேர்ந்த செபூத்தே எஸ்.எஸ்.இராமமூர்த்து கூறினார்.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் இந்தியர்களுக்கு மட்டும்தான் சொந்தமானது,
மற்ற இனத்திற்கு அங்கு கல்வி பயில்வதற்கு அதிகமான இடம் தரக்கூடாது.
கல்வி உதவித் தொகைகள் வழங்கக்கூடாது போன்ற விமர்சனங்களாக முன்வைத்து உரையாடி வருகின்றனர்.
மசீச என்ற சீன கட்சி முதன் முதலில் நமது நாட்டில் துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்கள்.
உத்தார் (UTAR)என்று பெயர் பெற்ற அந்தப் பலகலைக்கழகத்தில் பயில்வழதற்கு மதம் இனம் பாரமால் அனைத்து தரப்பினரைச் சார்ந்த மாணவர்களுக்கும் அங்கு பயில்வதற்கு வாய்பளிக்கப்பட்டது.
அதில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டதை யாராலும் மறுத்திட முடியாது என்றார் அவர்.
அதுபோல மஇகா கட்சியைச் சேர்ந்த நாமும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை உருவாக்கினோம்.ஆரம்பத்தில் இருந்து இன்று வரை இந்திய மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது . மஇகா கட்சியைச் சார்ந்த மாணவர்களுக்கும் மட்டும் தான் அங்கு கல்வி உதவித் தொகைகள் வழங்கபடவில்லை,
மாறாக வசதி குறைந்த அனைத்து இந்திய மாணவர்களுக்கும் கட்சி பாரஸ்பரம் காட்டாமல் அங்கு கல்வித் தொகைகள் வழங்கப்பட்டு வந்துதான் உண்மை.
அதே போல அங்கு பயிலும் வசதி குறைந்த மற்ற இன மாணவர்களுக்கும் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நமது மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ டத்தோஶ்ரீ டாக்டர் எஸ் ஏ.விக்னேஸ்வரன் எந்தப் பாகுபாடு இல்லாமல் இந்த உதவி தொகையினை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வியில் தடையின்று பயில வேண்டும் என அவரினுன்னதமான கொள்கைக்கு முதலில் தமது பாரட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக இராமூர்த்தி சொன்னார்.
கட்சியின் எதிர்கால அரசியலையும் மனதில் நிறுத்தியும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகதிற்கு நற்பெயரை பாதுக்காக்கும் வகையில் அவர் எடுத்து வரும் பல ஆற்றல் மிக்க சவால்கள் பாரட்டுக்குரியது.
மதம் இனம் பாராமல் நல்ல கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆதரவு கொடுப்பது ஏய்மஸ்ட் பல்கலைக்கழத்தின் வேந்தரின் தலையாய கண்ணியத்தை காட்டுகிறது.
இதுகுறித்து அவருக்கு மிகப் பெரிய சபாஷ்யைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

