SME வங்கி வணிகம் திட்டத்தின் கீழ் 20 லட்சம் வெள்ளி 8 இந்திய தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டது!

கோலாலம்பூர், ஜூன் 26-
நாட்டில் உள்ள இந்திய சிறு தொழில் முனைவர் களை வர்த்தக துறையில் ஊக்கு விக்கும் வகையில் SME வங்கி குழுமத்தின் 5 கோடி வெள்ளி வங்கி வணிகம் திட்டத்தை தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.இரமணன் கடந்த மார்ச் 23 ஆம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

நாட்டில் உள்ள இந்திய வணிகர்களுக்கு உதவும் வகையில் SME வங்கி குழுமம் இந்த வணிகம் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய வர்த்தகர்கள் தங்கள் வியாபாரத்திற்கு தேவையான இயந்திரங்கள், வர்த்தக உபகரணங்கள் வாங்க இந்த நிதி பெரிதும் உதவுகிறது.

குறிப்பாக ஒரு தொழில் முனைவோர் 1 லட்சம் வெள்ளி முதல் 3 லட்சம் வெள்ளியை 6 விழுக்காடு வட்டியில் கடனுதவியாக பெறலாம்.

இன்று SME வங்கி திட்டத்தின் கீழ் 8 தொழில் முனைவோருக்கு 20 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது.

துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தலைமையில் இன்று உலக வாணிப மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த நிதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

சிறு தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் வணிகம் நிதி மூலம் பெரும் நன்மை அடையலாம் என்றார் அவர்.

இந்த நிதியை பெற இந்திய தொழில் முனைவோர்கள் விரைந்து விண்ணப்பம் செய்யும்படி டத்தோஸ்ரீ இரமணன் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில்
Sme வங்கியின் தலைவர் Dato Muslim Hussain, SME வங்கியின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ டாக்டர் முகமட் ஹர்டி இப்ராஹிம், துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணனின் தனிச் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் ஆகியோரும் இந்த கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles