பல்கலைக்கழக மாணவி கொலை- மூன்று பேர் கைது!

சிப்பாங்: ஜூன் 27-
தங்கும் விடுதியில் பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரீத் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு ஆண் உட்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான மூன்று சந்தேக நபர்களுக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை சைபர்ஜெயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது விடுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதான அவர்களுக்கு இன்று முதல் ஜூலை 3 வரை ஏழு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று சந்தேக நபர்கள் இன்று போலிஸ் பாதுகாப்புடன் காலை 8.30 மணிக்கு கைவிலங்குகளுடன் சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இன்று முதல் அடுத்த வியாழக்கிழமை வரை சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி அசரோரானி அப்துல் ரஹ்மான் தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles