
வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதிய திட்டத்தை அயலக தமிழக தினம் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் .
நேற்று ஜனவரி 12ஆம் தேதி அயலக தமிழக தினம்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
கோவிட் 19 நோயத்தொற்றின் போது 80,000 தமிழ் மக்கள் தமிழ்நாடு திரும்பினர். அவர்களுக்கு சிறுதொழில் மூலம் கடன் வசதி செய்து தரப்பட்டதாக அவர் சொன்னார்.



