பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில்
மாபெரும் தைப்பொங்கல் விழா

தித்திக்கும் தமிழ்ப் புத்தாண்டு தைப்பொங்கவல முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் வரும் ஜனவரி 21 ஆம் தேதி மாபெரும் தைப்பொங்கல் விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் என்று பிரிக்பீல்ட்ஸ் கெஅடிலான் கட்சி தலைவரும் விழா ஏற்பாட்டுக் குழு தலைவரும் ரேமன் தெரிவித்தார்.

காலை 8.00 மணி தொடக்கம் காலை பத்து மணி வரை நடைபெறும் இந்த விழாவில் 50 க்கும் மேற்பட்ட மகளிர்கள் ஒன்றுகூடி பொங்கல் வைப்பார்கள்.

லெம்பா பந்தாய் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் எஸ் பக்தவச்சலம், ஸ்டார் மணியம், கே.கே. சுப்பிரமணியம், பிரியா உட்பட பலரும் தைப்பொங்கல் விழா விமரிசையாக நடைபெற முழு ஆதரவு வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தகவல் துறை அமைச்சருமான பாமி பாட்சில் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles