சிலாங்கூர் அம்பாங் அன்பு இதயம் ஏற்பாட்டில்
ஆதரவற்ற 20 பிள்ளைகளுக்கு
பள்ளி சீருடைகள், காலணிகள், புத்தக பைகள் அன்பளிப்பு

மீண்டும் பள்ளிக்கு செல்லும் ஸ்தாப்பாக் சமூக நல பாதுகாப்பு இல்லத்தைச் சேர்ந்த 20 பிள்ளைகளுக்கு சிலாங்கூர் அம்பாங் அன்பு இதயம் இயக்கத்தின் தலைவர் கணேசன் ஏற்பாட்டில் பள்ளி சீருடைகள் காலணிகள் புத்தக பைகள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

அம்பாங் வட்டாரத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு ஆண்டு தோறும் அன்பு இதயம் பேருதவி புரிந்து வருகிறது.

அந்த வகையில்
நல்ல உள்ளம் கொண்ட வணிகர்கள் குழுவைச் சேர்ந்த டத்தோ மணி அரசு, கே.கே சிவபாலன்,
பி.செல்வநாதன்,
ராதா,
டத்தோ ஸ்ரீ மணிமாறன்,
பல்விந்தர் சிங்
அப்பராவ்,
கணேசன்,
ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கிய நன்கொடை மூலம் 20 பிள்ளைகளுக்கு புதிய பள்ளி சீருடைகள் உட்பட அனைத்து பொருட்களையும் அன்பு இதயம் ஏற்பாட்டில் வாங்கி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தக்க நேரத்தில் தங்களுக்கு உதவி புரிந்த நல் உள்ளங்களுக்கு மாணவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles